Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனம் விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப் பேசுங்கள்

ADDED : ஜூன் 11, 2010 11:06 AM


Google News
Latest Tamil News
* கைகளின் அழகு வளையல்களில் இல்லை. அள்ளிக் கொடுப்பதில் தான் இருக்கிறது. இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுபவர்கள் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்கிறார்கள்.

* தனித்து வாழாதீர்கள். ஒதுங்கிப் போகாதீர்கள். மனம் விட்டுப் பேசுங்கள். ஒற்றுமை உணர்வுடன் எல்லோருடனும் உறவாடுங்கள். பரஸ்பர அன்பினால் நம் வாழ்வு ஒளியுடையதாகும் என்ற உண்மையை உணருங்கள்.

* கடவுளிடம் சரணாகதி அடைவது என்பது நம்முடைய செயல்களை எப்படியோ இறைவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிடுவதல்ல. கடவுள் நம்மைச் செயலற்றுப் போகச்செய்ய விரும்பவில்லை. மாறாக நம்மை நாமே உணரவேண்டும் என்றே விரும்புகிறார்.

* தனிமையில் இறை சிந்தனையோடு ஒன்றுவது கடினமான செயல். ஆனால், பலர் கூடி பாடி வழிபடும் போது மனம் இறைசிந்தனையில் எளிதாக ஈடுபடும்.

* நாக்கு கூர்மையான பற்களுக்கு நடுவில் கடிபடாமல் லாவகமாகச் செயலாற்றுவது போல, உலகில் தீயவர்களோடு பழக நேர்ந்தாலும் நல்லவர்கள் ஒழுக்கத்தை இழக்க மாட்டார்கள்.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us